கொழும்பில் எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரணம்
இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இவ்வாறு விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ,கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி, அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், மற்றும் பத்தரமுல்லை அபேகம மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.