2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவிலான புலம்பெயர் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தை வழங்கிய நாடுகளின் வரிசையில் குவைத் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அந்த பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, குவைத்தில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டில் (2025) மட்டும் சுமார் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த நாடுகளின் பட்டியலில் குவைத் முதலாமிடத்தில் உள்ளது.

இரண்டாமிடத்தில் கட்டாரும் ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது” என தெரிவித்தார்.
Source: https://ibctamil.com/article/sri-lanka-receives-more-foreign-income-from-kuwait-1781927721

