இலங்கையின் (sri lanka)மக்கள் தொகை கடந்த 02 ஆண்டுகளில் சுமார் 2,64,950 ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகள் காட்டுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின்(university of peradeniya) பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அதுகோரல(Vasantha Athukorala) தெரிவித்தார்
2021-2022 காலகட்டத்தில் இலங்கையின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 22,181 மில்லியனாக இருந்தது, 2021/2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
குறைவடைந்த மக்கள் தொகை
ஜூலை 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையில் ஆண்டு மக்கள் தொகை 1,44,395 ஆகக் குறைந்து 22.37 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.
மேலும், ஜூன் 2023 மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 21,916 மில்லியனாக மேலும் குறைந்துள்ளது.
மக்கள் தொகை குறைய காரணம்
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலகட்டத்தில் நாட்டின் மக்கள் தொகை சுமாராக 1,20,055 குறைந்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தற்போது -0.7க்கு அருகில் உள்ளது.
இந்த மக்கள்தொகை சரிவுக்குக் காரணம், இயற்கை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட விரைவான சரிவு மற்றும் புலம்பெயர்தலில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பு ஆகும்.