உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவுடன் இலங்கை மிகவும் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக அமெரிக்காவுடன் நட்புறவுடன் பணியாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கான அவசியம் உள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம்
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.