இலங்கையின் தென்புற கடற்பகுதியில், தொழில்நுட்ப பிரச்சினையால், செயலிழந்த
கப்பலில் பயணித்தவர்களை இலங்கையின் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த வர்த்தக கப்பல் 14 பணியாளர்களையே இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
வியட்நாமில் இருந்து எகிப்துக்கு சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பலில், நேற்று தொழில்நுட்ப பிரச்சினை
ஏற்பட்டது.

சிக்கியிருந்தவர்கள் மீட்பு
இதனையடுத்து இலங்கையின் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையிலேயே
கடற்படையின் கப்பல் குறித்த இடத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கப்பல் சிக்கியிருந்த இந்திய, துருக்கிய மற்றும் அஸர்பைஜான்
நாட்டவர்களை இலங்கை கடற்படை மீட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அழைத்து
வந்துள்ளது.

