ஜேர்மனியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் இலங்கையை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த 11 வயதுடைய தமிழ் சிறுமியே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்
கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் விபத்து சம்பவித்ததாக தெரியவருகிறது.
லிவர்குஸ்ன்-ஓப்லேடன் பகுதியில் உள்ள சுற்றுவட்ட பாதைக்கு அருகில் பாடசாலைக்கு செல்லும் வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதசாரி கடவையை கடந்து சென்றவேளை சம்பவம்
பாதசாரி கடவையைக் கடந்து சென்று கொண்டிருந்த போது தொலைத்தொடர்பு வாகனம் ஒன்று வேகமாக வந்து சிறுமி மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் உடனடியாக சிறுமியை வைத்தியாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்