யாழ் (Jaffna) அணையா விளக்கு போராட்டத்தில் கிளிநொச்சியிலுள்ள (Kilinochchi) தரப்பினர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டமை முற்றிலும் தவறான கருத்து இருப்பினும் இதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் அணையா விளக்கு மூன்றாம் நாள் போராட்டத்திற்கு கிளிநொச்சியிலிருந்து ஏராளமான மக்கள் சென்று இருந்தனர்.
இதற்கான அழைப்பை நானும் விடுத்திருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட குழப்பகரமான சூழலுக்கு சிறீதரன் தலைமையில் கிளிநொச்சி தரப்பிலிருந்து வந்தவர்களே காரணம் என்ற ரீதியில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கருத்து முற்றிலும் தவறான கருத்து இதனை ஏற்றுகொள்ள முடியாது காரணம், என் மீது சேறு பூசும் தனிப்பட்ட நோக்கில் மக்களை அவமதிக்கின்றனர் அதற்காகவும் மற்றும் தவறு இல்லாவிட்டாலும் அந்த குழப்பகரமான சூழலுக்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/kYgKcupK9Lw

