டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இதற்கான தரவுகளை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன(Eranga Weeraratne) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் ஊடாக தரவுகளை வழங்குவதற்காக பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டை
இதற்காக இணையம் மூலமான திட்டமொன்றும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் டிஜிட்டல் அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போரின் நிழற்படம் மற்றும் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் கண் விழிகளின் அடையாளத்தை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிதாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போருக்கு முதலாம் கட்டத்தின் கீழ் டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பழைய அடையாள அட்டைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளையும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/nvikwfKwwn0