சமந்தா
நடிகை சமந்தா, தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலம். சினிமாவில் சாதித்த இவர் தொடர்ந்து நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு.
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து மீண்டுள்ளார். படங்களை தாண்டி வெப் தொட்ர்களில் பிஸியாக நடிக்க கமிட்டாகி வருகிறார். கடைசியாக சிடாடல் ஹனி பன்னி என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.

ஓபன் டாக்
இந்த வெப் தொடர் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா பேசுகையில், வெப் தொடரில் ஒரு அம்மாவாக நடித்துள்ள சமந்தா, எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு உள்ளது.
இப்போது ஒன்றும் கால தாமதம் ஆகவில்லை, எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அது அழகான அனுபவம். அதை நான் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் மக்கள் பெரும்பாலும் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வயது தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் தாய் ஆகலாம் என கூறியுள்ளார்.

Source: https://cineulagam.com/article/still-have-a-dream-of-being-a-mother-samantha-1731398259

