இந்திய தலைநகர் டெல்லியில் (Delhi) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நடுக்கம் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
28.59 வடக்கு அட்சரேகையிலும், 77.16 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் பின்விளைவுகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
வட இந்தியப் பகுதி
டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம், நேபாளத்தில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி-என்சிஆர் மற்றும் பல வட இந்தியப் பகுதிகளில் உணரப்பட்டது.
எவ்வாறெனினும், எந்தவொரு சொத்துக்களுக்கும் அங்கு சேதம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.