கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து மாணவி ஒருவரை காணவில்லை என காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த லமங்கெதர தருசி சம்பிகா என்ற பாடசாலை மாணவியே காணாமற் போனவராவார்.
மாணவியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர்
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கந்தேநுவர காவல்துறையினர் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அத்துடன் மாணவி சுமார் 05 அடி உயரம் கொண்டவர் எனவும் அவர் இலக்கம் 85 கந்தேசநுவர அல்வத்தை என்ற முகவரியில் வசிக்கின்றார் எனவும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன மாணவி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத்071 – 8592943 அல்லது 066 – 3060954 தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.