உள்ளூராட்சி
சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன்
மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஆகியோருக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30.05.2025) பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(28.05.2025) நடாத்திய ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கியுள்ளன.
இந்தப் பேச்சு பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும் வாய் மூலமான
பேச்சாக மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

