கொட்டாஞ்சேனை (Colombo 13) கல்பொத்த சந்தி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்குத் துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கொலை சம்பவம் டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் கடந்த 21ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர், மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், ஒருகொடவத்தையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள்
அதன் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த தோட்டாக்களைக் காட்ட காக்கை தீவு பகுதிக்குச் சென்றபோது, காவல்துறை அதிகாரி ஒருவரின் கையிலிருந்த துப்பாக்கியை பறித்து காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் உயிரிழந்தனர் .
இவ்வாறான பின்னனியில் குறித்த சம்பவத்திற்குத் துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபர் காவல்துறையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS 👇👇👇
https://www.youtube.com/embed/SvTIQdbaRYU