தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் காங்கேசன்துறையில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி நகரவுள்ளது.
அதன் படி, குறித்த பிரசார பயணம் நாளை (24) மாலை 3:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு முன்னராக, நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் காலை 10:45 மணிக்கு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளினுடனான கூட்டத்தில் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளவுள்ளார்.
பொதுக்கூட்டம்
அதனை தொடர்ந்து, காலை 12:30 மணிக்கு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்.
இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரசாரப் பயணம் இன்று (23) பொலிகண்டியில் இருந்து ஆரம்பித்து காங்கேசன்துறையில் நிறைவடைந்தது.
இதன் படி, பிரசார பயணம் நாளை (24) மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் நோக்கி நகரவுள்ளது.