முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும்: ரெலோ உறுதி!

வடக்கு – கிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவில் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆட்சி
மலர வேண்டும் அதில் நாங்கள் உறுதியாக இருப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி
கட்சியின் பங்காளி கட்சிகளில் ஒனாறாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலாே)
பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (10.05)
இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், “உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவது தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம்.

அந்தவகையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஊடாக தமிழ்த் தேசிய கட்சிகளோடு
இணைந்து சபைகளை பலப்படுத்துவதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை

வடக்கு – கிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவிலே
தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆட்சி மலர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக
இருக்கிறோம்.

அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களோடு, ஜனநாயக
தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்கள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு
ஒத்துழைப்பதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும்: ரெலோ உறுதி! | Tamil Nationalist Parties Should Rule North

அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாகவே வவுனியா மாநகரசபை அமைய வேண்டும்
என்பதும் எமது விருப்பம்.

எனவே, அதன் அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகளோடு
எமக்கு கிடைத்த விகிதாசார ஆசனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான
கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் முடிவை எட்டுவோம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து பயணிப்பது தொடர்பான முடிவுகள் எதுவும்
இன்று எடுக்கவில்லை.

இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எமது
தலைமைகுழு கூடி ஆராயவுள்ளது” எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.