யாழ்ப்பாணம்(Jaffna) – காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் காவல்துறை உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
இதன்போது, விரைந்து செயற்பட்ட காவல்துறை உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில், இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு இரண்டு உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் காவல்துறை பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.