ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் திடீரென சபைக்கு வருகைத் தந்துள்ளார்.
பேசுபொருளான நிகழ்வு
பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதிகள் கலந்துகொள்வதில்லை.
இவ்வாறிருக்க, இன்றையதினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சபையில் கலந்துகொண்டமை அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகியிருந்தது.