ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருப்பார்கள்.
அந்த வகையில், தற்போது இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
தண்டேல்:
நாக சைத்தன்யா ஜோடியாக சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் லவ் ஸ்டோரி. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து, இந்த ஜோடி நடிப்பில் மீண்டும் வெளியான திரைப்படம் தண்டேல். இப்படம் நாளை அதாவது மார்ச் 7 – ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
வரலட்சுமி பிறந்தநாளை யாருடன் கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரலாகும் புகைப்படங்கள்
குழந்தைகள் முன்னேற்றக் கழகம்:
‘சகுனி’ படத்தின் இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். இப்படம் நாளை ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
குடும்பஸ்தன்:
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன்.
மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ஜீ 5 OTT தளத்தில் நாளை வெளியாகிறது.