எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுளள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது தியத்தலாவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
செனவிரத்ன வீரசிங்க
பண்டாரவளை பதில் நீதவான் செனவிரத்ன வீரசிங்க இந்த நீதவான் விசாரணையை நடத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் டி.எச். திரன் திவங்க (27), கே.ஏ. தினுஷிகா லக்மினி (32), நிஹால் ரஞ்சித் வீரசிங்க (54), டபிள்யூ.பி. மதுஷா அனுராதினி (42), ஏ.ஜி.பி. நிலுஷா ஸ்ரீமாலி (39), ஷானிகா அனுராதினி (45), ஜெயனி ஜீவந்திகா (34), மற்றும் ஷனிகா அனுராதா (45) என விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேரின் உடல்கள் பதுளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





