முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டேன் பிரியசாத் கொலைச் சம்பவம்: அதிரடியாக கைதான மூவர்

சமூக மற்றும் அரசியல்  செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 காவல்துறை குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் வைத்து சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் மீது நேற்று (22) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

டேன் பிரியசாத் கொலைச் சம்பவம்: அதிரடியாக கைதான மூவர் | Three Arrested In Dan Priyasad Murder Case

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு ஒரு விருந்தின் போது இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த டேன் பிரியசாத்

அதேநேரம், துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டேன் பிரியசாத் கொலைச் சம்பவம்: அதிரடியாக கைதான மூவர் | Three Arrested In Dan Priyasad Murder Case

இதையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்களும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்களும் காணப்படுதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this,

https://www.youtube.com/embed/hW0EsaLLJd8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்