கனடாவில் (Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தானது நியூ பிரான்ஸ்விக் (New Brunswick) மாகாணத்தின் ஷெப்பீல்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனம் மரம் ஒன்றில் மோதி தீப்பற்றிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
இதேவேளை, உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , உயிரிழந்தவர்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நியூ பிரான்ஸ்விக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.