தக் லைஃப்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. நாயகன் படத்திற்கு பின் இயக்குநர் மணி ரத்னம் – கமல் ஹாசன் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதே, இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார்.
இவர்களுடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் என திரை நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

முதல் நாள் வசூல்
வசூலில் பட்டையை கிளப்பப்போகும் தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டுமே உலகளவில் இப்படம் ரூ. 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/thug-life-first-day-box-office-expectation-1749089984

