நடிகை ராதா
80களில் பிரபலமான நாயகி லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பவர் தான் நடிகை ராதா. பல நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா தான் ராதாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்தார்.
முதல் படமே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது, அதன்பிறகு அவரது பயணம் அமோகமாக அமைந்தது. 60 வயதான கேரக்டரில் நடித்த சிவாஜிக்கு ஜோடியாக ராதா முதல் மரியாதை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அறிமுகம் ஆன சில வருடங்களில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிகைகள் நடிக்க பயப்பட ராதா நடித்து சாதித்தார்.
வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, இதய கோவில், ஜல்லிக்கட்டு, ஜப்பானில் கல்யாணராமன் உட்பட பல படங்கள் மூலம் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

பிறந்தநாள்
கடந்த 1991ம் ஆண்டு ராஜசேகர் என்பவரை திருமணம் செய்த ராதாவிற்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார். 2 மகள்களும் சினிமாவில் அறிமுகமானாலும் தொடர்ந்து நடிக்கவில்லை, சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ராதா தனது 61வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram

