பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்துத் தீர்க்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், பல பள்ளி மாணவர்கள் புகையிலை மற்றும் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இது போன்ற பழக்கங்கள் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மேலும் அடிமையாவதற்கு வழிவகுக்கும். இது மாணவர்களிடையே அதிகரிக்க கூடும் என எச்சரித்துள்ளார்.
அதிகரிக்கும் பாவனை
அதேநேரம், மாணவர்கள், புகையிலைகளை கொள்வனவு செய்ய பணம் இல்லாதபோது, பெற்றோரிடமிருந்து திருடுதல் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் என்பள அதிகரிக்கின்றன.
எனவே, இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து கவனம் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், புகையிலை பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளிகள் மற்றும் கல்வி மையங்களில் இரகசிய சோதனைகளை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகையால், மாணவர்கள் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் ரூமி ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.