யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையை சாதகமாக
பயன்படுத்தி மண் கடத்தல் சம்பவம் இடம்பெறுகிறது.
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்
பெற்று வருவதாக மக்களால் தொடர் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.
நோய்கள் பரவும் அபாயம்
மண் அகழ்வால் வடமராட்சிக் கிழக்கின் பல இடங்கள் குன்றும் குழியுமாக
காணப்படுவதால் நீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் மண்
கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
ஆழியவளை பிரதான வீதியில் மணல் சிதறி காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வை
தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

