நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கொழும்பு பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிச்சேவை ஆணைக்குழு
கோட்டை நீதவானாக கடமையாற்றிய தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவானாக நிலுபுலி லங்காபுரவும், மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய சத்துரிக்கா டி சில்வா கல்கிசை நீதவானாகவும் இடமாற்றம் செய்யப்பட்டதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.