முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவையின் மறைவு தமிழர்களுக்கு இழப்பு – செந்தில் தொண்டமான்

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயதுவரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.

விட்டுச்சென்ற பணிகள்

போருக்கு முன்னரும் பின்னரும் என இவரது அரசியல் நகர்வுகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்திலும் இவரது பணி காத்திரமாக இருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா.

மாவையின் மறைவு தமிழர்களுக்கு இழப்பு - செந்தில் தொண்டமான் | Tribute To Mavai From Senthil Thondaman

அன்னாரின் இழப்பு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் மிகநெருங்கிய உறவு இருந்தது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இந்த உறவு தொடர்ந்தது. மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து அவர் பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்துள்ளார்.

மாவையின் மறைவு தமிழர்களுக்கு இழப்பு - செந்தில் தொண்டமான் | Tribute To Mavai From Senthil Thondaman

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் மக்களுக்கும் இ.தொ.கா சார்பாக தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,
அவர் விட்டுச்சென்ற பணிகளை தமிழரசு கட்சி தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்