மூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்
சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (15) காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றுள்ளது.
மலரஞ்சலி
இதன்போது, நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நாணயக்கார, செயலாளர்
திலங்க காமினி , பொருளாளர் மு.இராமசந்திரன், தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு
மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இணைந்து அன்னாரின்
உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலக்குறைவினால் கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கியமை குறிப்பிடத்தக்கது.