கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள்
முகாமைதத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார
நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்ற கோரி உரிமையாளர்களுக்கு கடிதங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
இதனால் உறுதி காணி உள்ளவர்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தமது வாழ்வாதாரங்களை
இழப்பதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிடம்
முறையிட்டனர்.
முறைப்பாடுகள்
எனவே இது தொடர்பாக கிண்ணியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் கொண்டு வந்த
பிரேரணையின் பிறகு நேற்று (19) கரையோர பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தரப்புடன் நாடாளுமன்ற மன்ற
உறுப்பினர் கலந்துரையாடினார்.

அதேவேளை, கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தும்
முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இம்ரான் மகருப்புடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி
தலைமையிலான குழுவினர் கிண்ணியா துறையாடி பெரிய பாலத்தின் கீழான பொழுதுபோக்கு
பூங்காவை பார்வையிட நேற்று (19) விஜயம் செய்தனர்.








