முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரம் – இலங்கையர் தொடர்பில் உயர்ஸ்தானிகர் தகவல்

பிரித்தானியாவில் (United Kingdom) நிலவும் அமைதியின்மை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கேட்டறிந்ததாக பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அங்கு வாழும் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய – இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த ரோஹித்த போகொல்லாகம அங்கு நிலவும் அமைதியின்மை நிலவரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இதுகுறித்து நாம் பிரித்தானியா அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருவதுடன், நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உத்தரவாதமளித்திருக்கிறோம் என உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரம் - இலங்கையர் தொடர்பில் உயர்ஸ்தானிகர் தகவல் | Uk Riots And Sri Lankans Security Situation

அத்தோடு பிரித்தானியா வாழ் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறும், உள்நாட்டு செய்திகள் மற்றும் அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பிரித்தானியாவில் பல்லின, பல்கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 750,000 இலங்கையர்கள் வாழ்வதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியின்மைக்குக் காரணமானவர்

பிரித்தானியாவின் உரிய அதிகாரிகள் இந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரம் - இலங்கையர் தொடர்பில் உயர்ஸ்தானிகர் தகவல் | Uk Riots And Sri Lankans Security Situation

மேலும் பிரித்தானியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 1044 7475206220, 020 7262 1841 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ உயர்ஸ்தானிகரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் ரோஹித்த போகொல்லாகம கேட்டுக்கொண்டார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.