பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) யானைச் சின்னத்துக்குப் பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார்.
யானைச் சின்னம்
அதே அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் யானைச் சின்னத்துக்குப் பதில் வேறொரு சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும் அன்னச் சின்னத்திலேயே இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்த வேட்பாளர்கள் அன்னச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.