பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவுக்காக அமெரிக்கா(us) வழங்கிய நன்கொடையை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு 917 பாடசாலைகளில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்க விவசாய திணைக்களத்தின் தலைமையில் சேவ் த சில்ரன் அமைப்பின் தலையீட்டில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நன்கொடை
இதற்கமைய கொழும்பு(colombo) மாவட்ட பாடசாலைகளுக்கு இந்த நன்கொடை வழங்கும் பணிகள் மஹரகமவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்(Julie Chung) கலந்துகொண்டார். அரிசி, செமன், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பெருமை அடைகின்றேன்
இங்கு கருத்து தெரிவித்த தூதுவர் ஜூலி சங்க், உங்களது பாடசாலையில் ஒரு காலைப்பொழுதினை அனுபவிப்பதற்காக இங்கு மஹரகமைக்கு வருகை தந்ததை இட்டு நான் பெருமை அடைகின்றேன்.
காலையுணவு முதல் வகுப்பறை நடவடிக்கைகள் வரை ஆர்வமுள்ள மாணவர்களின் புன்னகையையும் மீண்டெழும் தன்மையுடைய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பார்ப்பது மனதுக்கு இதமாக இருப்பதாக குறிப்பிட்டார்.