நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கைகளின்படி, அபேவர்தனவை புலனாய்வாளர்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் துருவி,துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள்
நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி உட்பட 28 அரசியல்வாதிகள் மீது FCID விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

அண்மைய சில நாட்களாக பல்வேறு மோசடிகள் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மீதான விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

