வவுனியா(vavuniya) மாவட்டத்தில் முதன்முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள்
வழங்கும் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம்பெற்றது.
இந்த திட்டத்தின் கீழ், 2021 இற்கு பின்னர் இலங்கையில் பிறந்த குழந்தைகள்
புதிய தேசிய பிறப்பு சான்றிதழ்களினை பெற்றுக்கொள்ள முடியும் .
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை
இந்த தேசிய பிறப்பு சான்றிதழ்கள் சிங்களம்-அல்லது தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக
ஆங்கில மொழியிலும் அச்சிடப்படுகின்றது.
எனவே, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை என
தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் 30 குழந்தைகளுக்கு இன்று பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி
வைக்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்ர, துணைப் பதிவாளர் நாயகம்
ஆனந்தி ஜெயரட்ணம் மற்றும் பி. பிரபாகர், வவுனியா காணிப் பதிவாளர் கிருஷ்ணராஜ்
லிசாந்தனி, வவுனியா பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் சசிகலா
யோஜீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

