முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..!

வவுனியாவில் அன்னை பூபதியின் 37ஆவது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு
முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இன்று (19.04.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்,

தமிழ் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்காகவும், உரிமைகளுக்காகவும் தன்னை
அர்ப்பணித்த அன்னைக்கான அஞ்சலியை தமிழர் தேசம் இன்று செலுத்திக்
கொண்டிருக்கிறது.

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தை சர்வதேச பொறிமுறையூடாக சர்வதேச
மத்தியஸ்தத்தின் ஊடாகவே தீர்க்க முடியும். குற்றவாளிகளே பிரச்சினையை தீர்ப்பது
நீதியாக அமையாது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வை பெறுவதற்கு தமிழ் இறையாண்மை
அவசியமான ஒன்று. அதனை நோக்கியே எமது போராட்டங்கள் அமைந்துள்ளது.
எதிர்காலத்திலும் தமிழ் இறையாண்மை எமக்கு தேவை என்ற விடயத்தை தொடர்ச்சியாக
சர்வதேசத்திற்கு உரத்துச் சொல்வோம் என குறிப்பிட்டுள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாகி அன்னை பூபதியின் 37ஆவது
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன்
தலைமையில் வவுனியா நகரசபை முன்றலில் அமைந்துளள பொங்கு தமிழ் தூபியில் இன்று
(19.04) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, அன்னைபூபதியின் திருவுருவப்
படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டதுடன் தீபமும்
ஏற்றி வைக்கப்பட்டது.

இதில் கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து
கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

மட்டக்களப்பு

இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய
முன்றலில் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து
உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர்
துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் தியாகதீபம்
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து
அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என
பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் அன்னையின்
திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உணர்வு
பூர்வமாக அனுஷ்டித்தனர்.

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுணதீவு பிரதேச சபை வேட்பாளர் செல்வகுமார்
தலைமையில் ஆயித்தியமலை பிரதேசத்திலுள்ள பிரத்தியோகமான இடத்தில் இடம்பெற்ற இந்த
நினைவேந்தலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட
அமைப்பாளர் குகநாதன், வெள்ளாவெளி பிரதேச அமைப்பாளர் குமாரசிங்கம் மற்றும்
வவுணதீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள்
கலந்து கொண்டனர்.

இதன் போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர்
ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மாவட்டக் கிளைப் பணிமனையில் இன்றையதினம் (19) அன்னைபூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், இனவிடுதலை என்ற இறுதி இலக்கை அடையும் வரை
திகாயகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப்போரின் வீரியம் ஒருபோதும்
ஓயப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அன்னை பூபதிக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி..! | Vavuniya Memorial Day

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை
உறுப்பினர்கள், வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும்
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.