முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதியின் பின்னரான விலைக்குறைப்பு: அமைச்சு வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதியின் போது வரிகளைக் குறைக்கவோ அல்லது விலைகளைக் குறைக்கவோ அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், அமைச்சரவைக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது தான் சமீபத்தில் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், பெப்ரவரியில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவை எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்தால் இலங்கை வாகனங்களுக்கான வரிகளைக் குறைக்கக்கூடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும் கூறியுள்ளார். 

வரிக் குறைப்பு 

இந்நிலையில், இது குறித்த விளக்கிய அவர், அப்போது, ​​வாகனங்களின் தேவை மற்றும் கொள்முதல் காரணமாக உள்ளூர் சந்தையில் விலைகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்று மட்டுமே தாம் குறிப்பிட்டதாகக் தெரிவித்துள்ளார். 

வாகன இறக்குமதியின் பின்னரான விலைக்குறைப்பு: அமைச்சு வெளியிட்ட தகவல் | Vehicle Imports In Sri Lanka Vehicle Prices

மேலும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் சாதாரண சந்தை நிலைமைகளின் கீழ் தளர்த்தப்படவில்லை, ஆனால் வரம்புகளின் கீழ், குறிப்பாக அந்நிய செலாவணியின் கீழ் தளர்த்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, “இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி செய்ய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், மறுபுறம், இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் அந்நியச் செலாவணியை மத்திய வங்கி கண்காணிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் தீர்மானம் 

வாகன இறக்குமதிக்காக கோரப்பட்ட கடன் கடிதங்கள் (LC) மற்றும் சந்தை செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அந்நிய செலாவணியை விடுவிப்பது அல்லது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது குறித்து மத்திய வங்கி முடிவு செய்யும் என்றும் அமைச்சர் அனில் ஜெயந்த குறிப்பிட்டுள்ளார். 

வாகன இறக்குமதியின் பின்னரான விலைக்குறைப்பு: அமைச்சு வெளியிட்ட தகவல் | Vehicle Imports In Sri Lanka Vehicle Prices

அதுமாத்திரமன்றி, “உள்ளூர் சந்தையில் வாகன விலைகள் அதிகரித்துள்ளனவா அல்லது குறைந்துள்ளனவா என்பது குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில், வாகன இறக்குமதி தொடர்பான எந்தவொரு முடிவும் அரசாங்கத்தினாலோ அல்லது தொடர்புடைய மாகாண நிறுவனங்களினாலோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். 

வாகன இறக்குமதியின் போது வரிகள் குறைக்கப்படுவதாகக் கூறும் செய்தி தவறானது என்று துணை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியதுடன் மேலும் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட கூடாது என்றும் எச்சரித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.