கண்டி நகரில் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபை இந்த தகவலை வழங்கியுள்ளது.
கடுமையான காலநிலை
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த கடுமையான வெள்ளத்தினால் இந்த நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

நாட்டைப் பாதித்த பாதகமான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைபட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது கண்டி நகரில் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

