மதுப் பாவனையில் இருந்த கணவனை நல்வழிப்படுத்த முயற்சித்த மனைவி உடலில்
தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது, பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த 31வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் கணவர் தினமும் மதுபான பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவரை
நல்வழிப்படுத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை
ஊற்றிவிட்டு தீப்பெட்டியில் இருந்து தீ மூட்டி மிரட்டிய வேளை
திடீரென அவர்மீது தீப்பற்றியது.
மரண விசாரணைகள்
இவ்வாறு தவறான முடிவை எடுத்த அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும்
தீப்பற்றியது.
இதன்போது, இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர்
மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டவேளை, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருகின்றார்.