சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதில் கவனம் செலுத்தாததால், உணவு பொருட்களின் விலையை குறைக்க வியாபாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
சமையல் எரிவாயு, முட்டை, மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ள நிலையில், உணவு பொருட்களின் விலைகளை குறைக்காமல், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வணிகர்கள் நுகர்வோரை ஒடுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக முட்டை, கோதுமை மா மற்றும் உணவு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
அதனுடன் உணவு உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் தமது உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால் வழமை போன்று இந்நாட்டு நுகர்வோர் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.