இந்தியாவின்(india) ராஜஸ்தான்(rajasthan) மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 55 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்தமை மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் அந்த பெண் மருத்துவமனையில் நான்காவது குழந்தை என்று கூறி, பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்
இந்த பெண்ணுக்கு 05 குழந்தைகள் பிறந்த சில நாட்களில் உயிரிழந்து விட்டன. மீதமுள்ள குழந்தைகள் இவர்களுடன் வசித்து வருகின்றனர். அதில் 5 குழந்தைகளுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.இந்த சூழலில், ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இவர் 55வது வயதில் 17வது குழந்தையை பெற்று எடுத்தார். தாயும் குழந்தையும் நலமுடன் இருக்கின்றனர்.
ஏற்கனவே வறுமையில் தவிக்கும் இந்த தம்பதியினர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் கஷ்டமான சூழலை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. மேலும் நிறைய கடன் உள்ளதால், இந்த தம்பதியினர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவு
17 குழந்தைகளுக்கு தந்தையான காவ்ரா கல்பெலியா கூறுகையில், ”குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் நிறைய கஷ்டங்கள் இருக்கிறது. குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதிலும் பண பிரச்னை இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை அனுபவித்து வருகிறேன்,” என்றார்.