தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் யாழ். பிரதேசத்தை மாத்திரம் அல்ல
நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை
முன்னெடுத்து வருகின்றோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட
பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் இதனை கூறியுள்ளார்..
மேலும் தெரிவிக்கையில்,
பெரிய தொழிற்சாலை
பெரிய தொழிற்சாலைகளுக்கு முன்னால் நின்று பேசவேண்டிய நாங்கள் காடுகளுக்கு
உள்ளே நின்று பேச வேண்டிய சூழ்நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
1990
ஆம் ஆண்டுகளில் இவ்வாறான ஒரு தொழிற்சாலை இருந்ததா என்று பார்க்கின்றபொழுது
ஆச்சரியமாக இருக்கின்றது.
அவ்வாறான ஒரு மகிமையான தொழிற்சாலை இருந்த இடம் இன்று
காடுகள் மண்டி கிடக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் இந்த பிரதேசத்தை மாத்திரம் அல்ல
நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை
முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வேலையை முன்னெடுக்கும் போது வடக்குமாகாணத்தில் கூடுதல் கவனத்தை
செலுத்துகின்றோம்.
அந்த வகையில் முதலாவது வேலை திட்டமாக தமிழர்களுடைய அபிமானத்தை மீள
கட்டியெழுப்புகின்ற காங்கேசன்துறை தொழில்பேட்டையை நவீனமயமாக எவ்வாறு கையாள்வது
எவ்வாறு மீளப்புனர்நிர்மானம் செய்வது என்பதை ஆராயவே மூன்று அமைச்சர்கள்
கலந்துகொண்டு இந்த வேலைகளை ஆய்வு செய்துள்ளோம்” என்றார்.