முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக வங்கியின் வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகள் தொடர்பில் முன்மொழிவு

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள
அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று(29) நடைபெற்றுள்ளது.

ஆளுநர் தனது வரவேற்புரையில், ஜனாதிபதியின் வழிகாட்டலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வந்துள்ள உலக வங்கிக்
குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் முயற்சி

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
சந்திரசேகரன், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ
வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உலக வங்கியின் வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகள் தொடர்பில் முன்மொழிவு | World Bank S Northern Province Development

அத்துடன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
அரசாங்கத்தின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும்
அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு
மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7
வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

உலக வங்கியின் வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகள் தொடர்பில் முன்மொழிவு | World Bank S Northern Province Development

இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது
மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்துள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்