முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் முன்னணி கப்பல் நிறுவனம் கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந் உலகின் முன்னணி கப்பல் நிறுவனமொன்று கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான CMA CGM-நிறுவனமே இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் வெளிக்காட்டியுள்ளது.

குறித்த நிறுவனம் உலகின் முக்கிய துறைமுகங்களில் 65-க்கும் மேற்பட்ட கொள்கலன் முனையங்களைக் கொண்ட ஒரு முன்னணி முனையச் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்புத் துறைமுகம்.. 

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் கிறிஸ்டின் கபோட் தலைமையிலான தூதுக்குழுவொன்று, கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

உலகின் முன்னணி கப்பல் நிறுவனம் கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் | World Leading Shipping Company Investing Colombo

கொழும்புத் துறைமுகத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தின் காரணமாக, கொள்கலன் மாற்றுவழிப் போக்குவரத்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பெரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், கூட்டு முயற்சி முதலீடுகள் மூலம் கொள்கலன் போக்குவரத்து அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது கிறிஸ்டின் கபோட் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுக மேற்கு முனையத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும் தனது நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுஇ ​​கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்திற்கு வரும் கொள்கலன்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சி.எம்.ஏ சி.ஜி.எம் (CMA CGM) நிறுவனம் கையாளுகிறது என்றும், அந்தத் திறனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கிறிஸ்டின் கபோட் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனது நிறுவனத்தின் வான்வழி சரக்குப் பிரிவின் திறன்களைப் பயன்படுத்தி, இலங்கையில் வான்வழி சரக்குத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க விரைவில் மேற்கொள்ளவுள்ள பிரான்சுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் போது, ​​ CMA CGM-இன் தலைவர் மற்றும் பிரதம நிர்வாக அதிகாரியான ரோடால்ஃப் சாடே அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

Source: https://tamilwin.com/article/world-leading-shipping-company-investing-colombo-1783194416

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.