முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 25ஆம் திகதியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யோஷித ராஜபக்சவின் கைதுக்கு பின்னால் இந்தியாவின் பின்புலம் இருக்கலாம் என இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“இந்திய நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவில் இருக்கும் செல்வந்தரின் ஊடாக ஹில்டன் ஹோட்டலுக்கு பக்கத்தில் இலங்கை ரூபாவில் 600 கோடி மதிப்பிலான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான பணப்பரிமாற்றம் தொடர்பில் தான் யோஷித கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

டெல்லியை தளமாக கொண்ட இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த ஒரு திட்டமாகதான் அதை பார்க்கிறார்கள்.

டெல்லியிலிருந்து தான் இந்த திட்டத்திற்கான பணம் வந்துள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்