வவுனியா வைத்தியசாலையின் (Vavunia Hospital) நோயாளர் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகை, வவுனியா வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கபட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை நோயாளர் விடுதியில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.