தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் தொடருந்தின் பாதைக்கு அருகில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு(colombo) கோட்டை நோக்கி நேற்று (18) காலை, சென்ற விரைவு தொடருந்தில் பயணித்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மிதிபலகையில் பயணித்தவேளை சம்பவம்
கணேமுல்ல தெனிய வீதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சடலம் ராகம வைத்தியசாலையில்
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக தொடருந்தின் மிதிபலகையில் நின்று பயணிப்பவர்கள் இவ்வாறான அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/young-man-traveling-by-train-died-1731994508

