வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அதன் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இன்று காலை 10:30 மணிளவில் ஆரம்பமாகியது.
இதில் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசாங்கமும் புதிய அதனுடைய அமைச்சரும் மீனவர்களுடைய பிரச்சனைகளுக்கான எந்தவித தீர்வுகளையும் முன் வைக்காத நிலையில் தேசிய ரீதியில் மாபெரும் மீனவர்களுடைய போராட்டம் ஒன்றியம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பொதுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வட மாகாணத்திற்கு உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேமன் குமார பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் அதன் மாவட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தின் இறுதியில் கடற்றொழில் நீரியல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருன் கலந்துகொண்டதுடன் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டார்.
Source: https://samugammedia.com/northern-fishermens-network-protests-against-the-government-1782562745

