முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசிரியர் பரீட்சையில் அநீதி; பட்டதாரிகள் நாம் தெருவில் – யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்புப் போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே  இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.  

அத்தோடு வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.

அதனால் வேலை வாய்ப்பு கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வியாழக்கிழமை காலை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். தீர்வுகள் கிடைக்க பெறாமல் விடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/injustice-in-the-teacher-exam-we-graduates-are-on-the-streets—a-protest-is-about-to-erupt-in-jaffna-1782217814

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்