முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் பௌத்த துறவிகளுக்கென விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும்! – தேரர் வலியுறுத்து

இலங்கையில் பௌத்த துறவிகள் எதிர்கொள்ளும் ஒழுக்கநெறி மற்றும் சிவில் விவகாரங்களை கையாள்வதற்கும், அவர்களின் கௌரவத்தையும் பௌத்த சாசனத்தின் உன்னத நிலையையும் பாதுகாப்பதற்கும், பௌத்த துறவிகளுக்கென தனித்துவமான விசேட நீதிமன்ற கட்டமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் வலியுறுத்தியுள்ளார்.

பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று காணொளி ஊடாக இடம்பெற்ற விசேட தர்ம போதனையின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பின்படி பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும் என்றும், துறவிகளின் கௌரவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தனியான நீதித்துறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் குறிப்பிட்டார்.

1815 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் 5ஆம் பிரிவிலும், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 9ஆம் பிரிவிலும் பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அரசியலமைப்பின் 10 மற்றும் 14ஆம் பிரிவுகளின் மூலம் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதச்சுதந்திரம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான விசேட பொறுப்பு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருப்பதை மறக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் தனிநபர் திருமணம், விவாகரத்து உள்ளிட்ட சிவில் விவகாரங்களை கையாள்வதற்காக காதி நீதிமன்றங்கள் சட்டப்பூர்வமாக இயங்கி வரும் நிலையில், அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளின் ஒழுக்கநெறி மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாளும் தனித்துவமான நீதிமன்றம் இதுவரை அமைக்கப்படாதது வரலாற்றுப் பிழை என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் பல்வேறு அரசுகள் பௌத்த சாசனத்திற்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறியிருந்தாலும், துறவிகளுக்கென பிரத்தியேக நீதிமன்றங்களை சட்டரீதியாக நிறுவுவதில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Source: https://samugammedia.com/a-special-court-should-be-set-up-for-buddhist-monks-in-sri-lanka–thera-emphasizes-1782793732

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.