முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல் நினோவால் இலங்கைக்கு பாரிய பாதிப்பு இல்லை – விவசாயத் திணைக்களம் நம்பிக்கை

எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றங்களினால் இலங்கைக்குப் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட மாட்டாது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி என். ஏ. ஆர். டி. விக்ரமரச்சி தெரிவித்துள்ளார்.

பேராதனை, கண்ணொறுவாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

“பசுபிக் சமுத்திரம் உட்பட உலகின் பல பகுதிகளில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக கடல் நீர் வெப்பமடைவதையே ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயத்துறை பாதிக்கப்படலாம் என்றும், மழைவீழ்ச்சி குறைந்து, வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், நெல் உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடையும் என்றும் சில எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் எமக்குக் கிடைக்கின்ற பருவமழைப் பொழிவு ஆகியவற்றின் காரணமாக, இந்த எல் நினோ தாக்கத்தினால் நாடு கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளாது என்றே நாங்கள் கருதுகின்றோம். தற்போதைய நிலையை விட சற்று அதிகமான வெப்பநிலையும், ஓரளவுக்குக் கூடுதல் மழைவீழ்ச்சியும் ஏற்படலாமே தவிர, அச்சுறுத்தலான சூழல் உருவாகாது.

இருந்த போதிலும், இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, குறைந்த நீர் விநியோகத்தைக் கொண்டு, வறட்சிக்குத் தாக்குப் பிடித்து வளரக்கூடிய உணவுப் பயிர்களை நாம் அடையாளம் கண்டு பயிரிட வேண்டும். எமது நாட்டைப் பொறுத்தமட்டில், குறைந்த காலத்தில் அறுவடை செய்யக்கூடிய, உலர் வலயத்திற்குப் பொருத்தமான நெல் ரகங்களைத் தெரிவு செய்து பயிரிடுவதன் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

அத்துடன், நாட்டிற்குள் பயிரிடக்கூடிய குரக்கன், பயறு, சோளம் போன்ற உப உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவுக்குத் தீர்வை எட்ட முடியும்.

இவ்வாறான ஒரு காலநிலை மாற்றம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டங்களை கடந்த கால அனுபவங்களின் மூலம் நாம் அறிந்துள்ளோம். நாட்டில் அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களில் எல்லாம் எமது நாட்டு விவசாயிகள் முன்வந்து கைகொடுத்தமையால், எமக்கு உணவுப் பிரச்சினைகள் பாரியளவில் ஏற்படவில்லை.

இலங்கை மக்களின் பிரதான உணவாக அரிசி காணப்படுவதுடன், அதில் நாம் தற்போது தன்னிறைவு அடைந்துள்ளோம். எனவே, எமது பிரதான உணவான அரிசி உற்பத்திக்கு இக்காலநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/no-major-impact-on-sri-lanka-from-l-nino–agriculture-department-confident-1781847225

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.